மன்னார் புதைகுழி தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் தோண்டப்படவுள்ளது.
அதன்படி 32 தடவைகள் புதைகுழி தோண்டப்பட்டு 80 பேரது எச்சங்கள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடபெற்றமையினால் கடந்த 24 ஆம் திகதி தோண்டும் பணி இடைநிறுத்தப்பட்டது.
அதன்படி மன்னார் நீதவானின் உத்தரவின் படி அவரது முன்னிலையிலும் அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியரட்ண முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.
எனினும் இதுவரை 80 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை எதுவிதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் இந்தப் புதைகுழியின் முடிவு எல்லை எங்குள்ளது என்றும் தெரியாத நிலையிலேயே மீட்புப் பணிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
















