வெளிநாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணியமாட்டோம்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

Mahinda-Rajapakse

நாட்டில் இடம்பெற்று முடிந்த போர் தொடர்பில் யாருக்கும் அடிபணிய அரசு தயாராக இல்லை.நாட்டு மக்களே எது சரி என தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கிறார் ஜனாதிபதி சர்வதேச அழுத்தங்களுக்கு தலை வணங்க அரசு தயாரில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது…..

நாட்டில் முன்னேடுக்கப்பட்ட போர் குறித்த சரி.பிழையை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
அதனை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானிக்க முடியாது என்று நாங்கள் மிக தெளிவாக கூறிவிட்டோம். இதனைத் தீர்மானிக்கும் உரிமை மக்கள் வசமே காணப்படுகின்றது.நாட்டு மக்கள் முன்னிலையில் தலை வணங்க நாங்கள் தயாராக உள்ளோம்.ஆனால் வெளிநாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளுக்கோ.அவர்களின் சகாக்களுக்கோ நாங்கள் ஒருபோதும் அடிபணியத் தயாராக இல்லை என்றார்.

Tags: , , ,

Leave a Reply