கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் இருவரும் கிளிநொச்சியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் அவர்கைள மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நேற்று இரவே கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை நேரம் இரவு 10.05ற்கு கைதான இவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் தனியாக விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser, INFORM, Human Rights Documentation Centre based in Colombo) அருட் தந்தை பிரவீன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் (CPR) இயக்குணர்.(Director of the Centre for Peace and Reconciliation (CPR) based in Jaffna) முனித உரிமைகள் பாதுகாவலர்.
இவர்கள் இருவரும் அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி அவரின் மகள் பூர்விகா ஆகியோருடைய கைது தடுத்து வைப்பு குறித்து கரிசைனை செலுத்தியதோடு அந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் இரவுப் பொழுதில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளர்.
















