இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

lk-war-crimeஇராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் என்னும் ஊடகம் இது தொடர்பான தகவலை ஒளிபரப்புச் செய்துள்ளது.

யுத்தத்தின் போது எவ்வாறு படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது பற்றி இராணுவச் சீருடை தரித்த படைவீரர் ஒருவர் விபரிப்பதாக இந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை இரண்டு தரப்பினரும் நிராகரித்திருந்தனர்.

Tags: , ,

Leave a Reply