தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உயர்மட்ட குழு ஜெனீவா நேற்று மாலை(16) ஜெனீவா சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,ஐ.நாவில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளது.
இந் நிலையில், ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களைச் சந்தித்து ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படப்படவிருக்கின்ற தீர்மானம் தொடர்பில் தமது நிலைப்பாட்டையும் தமிழர் தாயக பிரதேசங்களில் தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
















