மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அவசியம் எதுவும் கிடையாது என இலங்கைக்கான சீன பிரதி தூதுவர் ரென் பகியாங் (Ren Faqiang) தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையே நாட்டின் அபிவிருத்தி ஏற்படுவதற்கான பிரதான காரணி என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் ஓர் கருவியாக மனித உரிமை விவகாரங்களைப் பயன்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத் திட்டங்களுக்கு சீனா தொடர்ந்தும் முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

















