மஹிந்த ராஜபக்சவிடம் மனித உரிமைகளை காக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தல்

Pan-Kee-Moon

இலங்கை மனித உரிமைகள் தொடர்பான பாதுகாப்பு விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
கிளிநொச்சியில் வைத்து மனித உரிமை நடவடிக்கையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) இந்தக் கோரிக்கையை நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது விடுத்தார்.

குறித்த கைதுகள் தொடர்பில் தகவல் கிடைத்தது. மனித உரிமை நடவடிக்கையாளர்கள் குறித்தும் அறிந்திருக்கிறோம்.

இந்தநிலையில், 2009 ஆம் ஆண்டு தம்முடன் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களை காக்க வேண்டும் என்று டுஜாரிக் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் சர்வதேச மன்னிப்பு சபை, ஆசியா அமர்வு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு, சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழு என்பனவும் கிளிநொச்சி கைதுகள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ருக்கி பெர்ணான்டோ, கொழும்பை மையமாகக் கொண்ட இன்போம் அமைப்பை சேர்ந்தவர், வணக்கத்துக்குரிய பிதா பிரவீன் மகேசன் கத்தோலிக்க குருவாவார். இவர்கள் இருவரும் கடந்த 16 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 13 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி தர்மபுரத்தை சேர்ந்த தாயும் அவரது 13 வயது மகளையும் விடுவிக்கும் முகமாக செயற்பட்டமை தொடர்பிலேயே இரண்டு மனித உரிமை நடவடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புபிரிவில் வைத்து இருவரும் தனித்தனியே விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்தல் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டல் என்ற பயங்கரவாத தடைச்சட்ட பிரிவுகளின் அடிப்படையிலேயே இரண்டு மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply