மனித உரிமைவாதிகளின் கைதுக்குக் கடும் எதிர்ப்பு; சர்வதேச சமூகமும் சிவில் அமைப்புக்களும் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி

usa-flag2

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜெயகுமாரி ஆகியோரின் கைதுகளை சர்வதேச நாடுகளும் சிவில் அமைப்புக்களும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இலங்கை அரசின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் அதன்மீது அக்கறையைச் செலுத்தவேண்டிய அவ சியத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று அவை தெரிவித்துள்ளன. இந்தக் கைதுகள் இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைப்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஒரு போதும் உதவமாட்டாது என்றும் அந்த அமைப்புக்கள் சுட் டிக்காட்டியுள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் மீதான கைதுகள் போன்ற இலங்கையின் நட வடிக்கைகளே, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கவனம் இலங்கை மீது தொடர்ந்து செலுத்தப்பட வேண்டும் என்று எங்களை நம்ப வைக்கின்றது என்று தெரிவித்துள்ளது அமெரிக்கா. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களான ருக் ஷிபெர்னான்டோ மற்றும் அருட் தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று மாலை விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“”இந்தக் கைதுகள் தொடர்பில் அமெரிக்கா தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் இலங்கையின் பல பிரசித்தமான மனித உரிமை பாதுகாப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை குறித்து அமெரிக்கா தனது கரிசனையை வெளிப்படுத்துகின்றது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் சட்ட ஆலோசனைக்கான முழுமையான வாய்ப்பு மற்றும் வெளிப்படை யான சட்ட நடைமுறைகளை வழங்குமாறு இலங்கை அரச அதிகாரிகளிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம். நாம் அண்மையில் தொடர்ச்சியாகக் கூறிவருவது போல, சர்வதேச சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரே ரணைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, இலங்கையின் கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை நிலைமையே காரணமாகவுள்ளது. இது போன்ற செயல்கள், மனித உரிமைகள் சபையின் கவனம் தொடர்ந்தும் இலங்கை மீது செலுத்தப்படுவது அவசி யமாகும் என்று எம்மை நம்ப வைக்கின்றது”- என்று தெரிவித்துள்ளது அமெரிக்கா. இந்தத் தொடர் கைதுகள் தொடர்பில் சிவில் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகைகள் “”இறுதிக் கட்டப் போரில் இராணுவத்திடம் கையளித்த தங்கள் பிள்ளையைத் தேடி தொடர் போராட்டங்களில் கலந்து கொண்ட ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் திட்டம்போட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயகுமாரியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர். இது மிகவும் பயங்கரமானது. அந்தப் பகுதியிலுள்ள மக்கள் எவருமே இவர்கள் இப்படிச் செய்திருப்பார்கள் என்று சொல்லவுமில்லை. அத்துடன் அவர் கள் மீது சந்தேகம் கொள்ளவுமில்லை. இந்த நிலையில் நடந்த உண்மை பொய்யை அறிய மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருக்´ பெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் சென்றுள்ளனர். உண்மையைக் கண்டறிய யாருக்கும் உரிமை உண்டு. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வது அவர்களது உரிமை கடமை. அதை அவர்கள் செய்யத்தான் வேண்டும்.

ஜெனீவாவில் சில நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன. அங்கு பயங்கரமான தொரு நிலை நாட்டின் மீது உருவாகிவருகின்றது. இவ் வாறானதொரு நிலையில் நாட்டின் நன்மை கருதி அனைவரையும் விடுவிக்க வேண் டும். நாம் நாட்டின் நன்மைக்கா கவே செயற்படுகின்றோம். எமக்கு யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு மற்றும் மக்கள் கண்காணிப்புக் குழு என்பனவும் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், விடுதலையை வலியுறுத்தியும் உள்ளன. கடந்த வியாழக்கிழமை, கிளி நொச்சி தருமபுரத்தில் ஜெயகுமாரி மற்றும் அவரது 13 வயதான மகள் விபூசிகா ஆகியோர் கைது செய்யப்பட் டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களான ருக் ஷிபெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரி, ருக் ஷிபெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply