மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது – டேவிட் கமரூன்

uk-Minister-David2மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.கடந்த கால பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய தீர்வுத் திட்டங்களை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே சர்வதேச விசாரணைகளை நடாத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய முறையில் விசாரணை நடாத்துவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறுதியளித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டால் இலங்கையில் பாரியளவு வெற்றிகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply