ஓமந்தையில் மீண்டும் சோதனை ஆரம்பம்

crying-baby

வடக்கிலிருந்து வெளியேறுவோர் மற்றும் உள்நுழைவோருக்கான சோதனைகள் மீண்டும் ஓமந்தையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களினில் கைதுகள் கடத்தல்களினில் பிரபலமான ஓமந்தை சோதனை சாவடி கடந்த வடமாகாண தேர்தலை முன்னிட்டு கைவிடப்பட்டிருந்தது.

இதனிடையே கிளிநொச்சி பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை புதன்கிழமை சுற்றிவளைக்கப்பட்டுத்தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுப் புதன்கிழமை அதிகாலை முதல் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டுத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் தேசிய அடையாள அட்டைகளைப் பரிசோதித்து விசாரணைகளையும் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

Tags: , , ,

Leave a Reply