ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் – பயங்கரம் என்கிறது ஐ.தே.க.

Lakhsman_Kiriella_UNP

ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். நாங்கள் பலதடவைகள் புத்தி சொல்லியும் அவற்றை கண்டு கொள்ளாததன் பயனாக இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது இனிமேலாவது சர்வதேசத்துடன் முரண்படாமல் புத்திசாலித்தனமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்

ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பிற்பாடு ஏழு பேரை கொண்டு குழு இலங்கைக்கு வருகை தந்து விசாரணையொன்றை மேற்கொள்ளும் இச்செயற்பாடானது மிகவும் பயங்கரமானது. அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானம் சர்வதேச விசாரணையொன்றை வேண்டி நிற்கிறது. இலங்கை மீது சர்வதேசம் இவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்கு அரசாங்கமே மூல காரணமாகும்.

Tags: , , ,

Leave a Reply