அவுஸ்ரேலியாவில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பலவந்தமாக நாடுகடத்த்தப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையளர்களின் வழக்குகள் இன்றுவரையும் நிறைவு செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட வர்கள் தெரிவிக்கின்றனர் .
அவுஸ்ரேலியா அரசாங்கமானது இலங்கையில் தற்ப்போது எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று தமிழர்களை நாடுகடத்துகின்றது.
ஆனால் நாடுகடத்தப்பட்டவர்கள் அவர்களுடைய வழக்குகள் முடிவடையாத நிலையில் எந்தவிதமான தொழில் செய்வதற்கும் முடியாமல் இன்று நாடு வீதியில் நிற்கக்கூடிய நிலைதான் உள்ளதாக தெரிவித்தனர் .
தங்களது வலக்குக்கு செல்லும் போது சட்டத்தரணியின் பணம் கட்டுவதற்கும் முடியாத நிலையில் இருக்கும் போதும் வழக்குகளை தள்ளிப்போடுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது .
பாதுகாப்பு பிரிவினராலும் சி .ஐ டி யினராலும் எந்தநேரமும் அழைக்கும் போது விசாரனைக்கு செல்லவேண்டிய சூழ நிலையில் இருக்கின்றோம்.
இது போன்று இன்னும் எத்தனையோ பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம் இவற்றை பகிரங்கமாக எமக்கு சொல்ல முடியாத நிலை உள்ளது .
எமது பிரச்சனையை நாங்கள் முன்வந்து சொல்லும்போது எமது உயிருக்கு இலங்கையில் உத்தரவாதம் இல்லை
ஆனால் அவுஸ்ரேலியா அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் புகலிடக் கோரிக்கையலர்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது எம்மால் ஏற்று கொள்ள முடியாதெனவும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் கருது முற்றிலும் மாறுபட்ட கருத்து எனவும் தெரிவிக்கின்றனர்.
















