ஆஸியில் நேற்று இடம் பெற்ற இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் 6 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்

australian_flagநேற்று முன்தினம் சிட்னியில் உள்ள பெண்டிஹில்லில் தமிழ் புகலிடக் கோரிக்கை யாளர்களுக்கும் அவுஸ்ரேலியாவில் உள்ள வெள்ளை இனத்தைச்சேர்ந்தவர்கலுக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதன்போது இலங்கை தமிழர்கள் தாக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..

இலங்கை புகலிடக் கோரிக்கை யாளர்கல் சிலர் அவுஸ்ரேலியாவில் நடைமுறியில் உள்ள சட்டதிட்டங்களை மதிக்காமல் தங்களுடைய தேவைக்கு ஏற்றபடி நடக்கின்றதகவும் பாதையில் செல்லும் பெண்களிடம் குறும்புகள் செய்வதாகவும் பல பல கெட்ட பழக்கங்களில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

விசா நடைமுறை மாறியுள்ள இந்த சந்தர்ப்பத்தில்இவர்களின் இப்படி பட்ட செயல்களால் ஒட்டு மொத்த தமிழ் கோரிக்கை யாளர்களுக்கும் எதிர் காலத்தில் பாரிய பிரச்சனையை முகம் கொடுக்க நேர்ந்துள்ளமை மிகவும் மனவருத்துக்குரிய செயலக உள்ளது.

Tags: ,

Leave a Reply