வாள்வெட்டுச் சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக குடாநாட்டில் அதிகரித்துள்ளது. நேற்றும் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம் பவங்களில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். நாயன்மார் வீதியில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவரும், முன்பள்ளியில் பயிலும் சிறுமியும் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தியாகராஜா (வயது 62) என்பவரும், அவரது பேர்த்தியான வசந்தகுமார் மனுசா (வயது 4) என்ற சிறுமியுமே காயமடைந்தவர்களாவர். அதே இடத்தைச் சேர்ந்த ஒருவரே, அவரைக் கொடுவாக் கத்தியால் வெட்டிவிட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்படுகின்றது.
அச்சுவேலியில் நேற்று அதி காலை இரண்டு இளைஞர்கள் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களே காயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்வேலியைச் சேர்ந்த ஒருவரே தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்று தாக்குதல் நடத்தியுள்ளார் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தாக்குதலுக்குப் பயன்படுத்திய பொருள்களும் மீட்கப்படவில்லை.
நேற்று முன்தினம் உடுவில் பாலாவோடையில் வீடு புகுந்து வாளால் வெட்டிவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதற்கு சில நாள்களுக்கு முன்னர் சுன்னாகத்திலும் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கடந்த மாதம் பருத்தித்துறையில் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலைசெய் யப்பட்டார். அதனுடள் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
















