சமாதானம் பெற்றுக்கொடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகின்ற இன்று வடக்கும் கிழக்கும் அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் .மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இறுதி சந்தர்ப்பம் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற நான்கு திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

















