உறுப்பு நாடுகளின் மனித உரிமை பாதுகாப்பை வலுப்படுத்தும் முனைப்புக்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஈடுபட்டுள்ளது. உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்த யோசனைத் திட்டமொன்றுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மனித உரிமை பாதுகாப்பு தொடர்பிலான கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகள் தொடர்பில் முன் எச்சரிக்கை விடுத்தல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பிற்கு ஆதரவளித்தல் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தபபட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

















