ஐ.தே.கவின் தலைமைக் குழுவின் தலைவர் மகாநாயக்கர்களை சந்தித்து பேச்சு

unp2நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் குழுவின் தலைவர் கரு ஜெயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக தமது கட்சியை புனரமைத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்தனர்.

கடந்த தேர்தலின்போது பாரிய ஒழுங்கீனங்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையமான பெப்ரல் தெரிவித்திருந்தது.

எனினும் அது எந்த ஊடகங்களிலும் பிரசுரிக்கவோ ஒளிபரப்பப்படவோ இல்லை என்று இரண்டு தலைவர்களும் மகாநாயக்கர்களிடம் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் அளித்த கரு ஜெயசூரிய. அரசாங்கம் அபிவிருத்தி என்று கூறிக்கொண்டிருக்கையில் நாட்டு மக்கள் மூன்று வேளை உணவுக்காக கஸ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

கலாசார சீரழிவுகள் உச்சக்கட்டத்துக்கு சென்று குற்றங்கள் அதிகரித்து செல்வதாக கரு ஜெயசூரிய குறிப்பிட்டார்.

அரிசி ஒரு கிலோ 80 ரூபா வரை அதிகரித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tags: , ,

Leave a Reply