போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவள ஆலோசனைகள் வழங்க அரசு தீர்மானம்

meeting வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளரீதியான ஒத்துழைப்புகளையும் மனவள ஆலோசனைகளையும் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி அரசாங்கத்தினால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த மனவள ஆலோசனை அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மனவள ஆலோசனை திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், ஊனமுற்ற நபர்கள் ஆகியோருக்கே இந்த மனவள ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

Tags: , ,

Leave a Reply