நாட்டினுள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை இடம்பெற்றதும் அவ்வாறானதொரு சந்தர்ப்பமே என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக செயற்பட்ட செல்வநாயகம் கஜீபன் என குறிப்பிடப்படும் கோபி உள்ளிட்ட மூவர் இதன்போது மரணமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வருடப்பிறப்பின்போது வடக்கு, தெற்கு மக்கள் அச்சமின்றி இருப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்..
















