காங்கிரஸ் அரசை போன்று தமிழரை நாம் கைவிடோம் நரேந்திர மோடி உறுதி

Narendra-Modiஇலங்கைத் தமிழர்களை தற்போது மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசு கைவிட்டு விட்டது. ஆனால் நாம் ஆட்சியமைத்ததும் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு உதவுவோம். அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் இவ்வாறு தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளுக்காக நேற்றுச் சென்னை வந்திருந்தார் நரேந்திரமோடி. அப்போது ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும் போது,””டில்லியில் வலுவற்ற அரசு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயங்கும் அரசால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் அணி வெற்றி பெற்றால் தமிழக தலைவர்களான ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோரின் உறுதுணையுடன் வலுவான அரசை அமைப்போம். மத்தியில் துணிச்சல் மிக்க அரசு இல்லாததால், மக்கள் இப்போது துவண்டு இருக்கிறார்கள். அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், பங்களாதே­; உள்ளிட்டவை வளர்ந்துகொண்டிருக்கின்றன. அண்டை நாடுகளால் அச்சுறுத்தலும் இருக்கிறது. எனவே, துணிச்சல் மிக்க அரசு தேவை.

இலங்கையின் எங்கள் தமிழ்ச் சகோதரர்களுக்கும், மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ச் சகோததர்களுக்கும் நாங்கள் துணைபுரிவோம். அவர்களை தற்போது உள்ள அரசு கைவிட்டுவிட்டது. ஆனால், நாங்கள் கைவிடமாட்டோம். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் தாக்குகிறது. கேரள மீனவர்களை இத்தாலியினர் தாக்குகிறார்கள். மீனவர்களைப் பாதுகாக்க மத்தியில் உறுதியான ஆட்சி தேவை. அவர்களுக்கு உரிய செயல்திட்டங்களை எங்களது அரசு வகுக்கும் என்று தெரிவித்தார்.

அதேவேளை, நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து, தமிழக மாணவர் அமைப்புகளினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் நரேந்திர மோடியின் பயண ஒழுங்கில் எதுவித மாறுதலும் செய்யப்படவில்லை. சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தை அவரது வீட்டில் சென்று சந்தித்த மோடி அதன் பின்னர் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையின் 3 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பரப்புரைகளை மேற்கொண்டார்.

Tags: , ,

Leave a Reply