மீண்டும் யுத்தம் ஏற்படுவதனை தடுக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் – NPC

NPCநாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதனை தடுக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டுமென தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்கக் கூடிய வகையிலான ஓர் பொறிமுறைமையை உருவாக்க அசராங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வட மாகாணசபை உருவாக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், தேவையற்ற அழுத்தங்கள் இன்றி சுயாதீனமான இயங்கக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

அல்லது வட மாகாணசபை அமைத்தத்தில் எவ்வித பயனும் இருக்காது என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் காத்திரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைப் பொறிமுறைமைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வகையிலான ஓர் பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தெரிவித்துள்ளது.

வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரித்தள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம் நோக்கி நகராவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தமிழ் பொதுமக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply