அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு IOM மூலம் பதிவு செய்து இலங்கைக்கு சென்ற புகலிடக்க் கோரிக்கையலர்களுக்கு இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினரால் பணம் கேட்டு அச்சுறுத்துவதாக பாதிக்கப பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .
இவ்விடயம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு கடந்த வருடம் படகு மூலம் சென்றுள்ளார். தற்போது அவர் அங்கிருந்து IOM உதவியுடன் விமானம் மூலம் மீண்டும் இலங்கைகு வந்தடைந்தார் .
மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து அவரை வெளியில் கூப்பிட்டு விசாரணை செய்ய வேண்டும் உடன் வரவும் என அழைத்துக் கொண்டுஅவரிடம் ஒருதொகை பணம் கேட்டுள்ளனர் .
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்தற்போது தனது வீட்டை விட்டு வெளியில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் போது விமான நிலையத்தில் IOM தன்னை பாரம் எடுப்பதர்க்கு முதல் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்தான் தன்னை IOM பாரம் எடுத்ததாக தெரிவித்தார் .
ஆனால்அவுஸ்த்ரேலிய அரசாங்கமானது IOM மூலம் இலங்கை செல்பவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை என தெரிவித்த போதும் அங்கு சென்றவர்கள் பலவிதமான முறையில் அச்சுறுத்தி பாரிய அளவில் தாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















