புதுக்குடியிருப்பில் இலங்கை அரசின் யுத்த வெற்றி நிகழ்ச்சி

sri_lanka_war_victory_event_in_mullaitheevu_chandrasiri_இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில், மீண்டும் ஒரு யத்த நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் திங்களன்று யுத்த வெற்றிச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுனர் சந்திரசிறி கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனையடுத்து அங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுனர் சந்திரசிறி, “யுத்தத்தினால் பொருளாதார சேதம் ஏற்பட்டது. உயிரிழப்புக்கள் நேர்ந்தன. உடைமைகள் நாசமாகின. அதற்கும் மேலாக பலரும் மனவேதனைக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். எமது தாய்நாட்டில் அத்தகையதொரு நிலைமை மீண்டும் உருவாகுவதற்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது” என குறிப்பிட்டார்.

“எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்க்கைக்காகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கக் கூடாது என்பதே ஜனாதிபதியினதும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினதும் விருப்பமாகும்.

எமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு நாங்கள் இந்த நாட்டில் எங்கும் சென்ற வரக்கூடிய சூழல் எற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply