அவுஸ்திரேலியாவின் புதிய எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவு இன்று முதல் ஆரம்பம்

australian_flagஇலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக புலனாய்வாளர்களின் தலைமையிலான புதிய எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவு ஒன்றை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது.

இதன் பணிகள் நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக, அகதிகள் வெளியாகின்ற இலங்கை, மலேசியா, இந்தோனேசியா போன்ற அரசாங்கங்களுக்கு நிதியையும் வளங்களையும் வழங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் இது அவுஸ்திரேலியாவுக்கு மிகுந்த செலவினத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் புலனாய்வுத்துறையை மையப்படுத்திய புதிய படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படைப்பிரிவு அவுஸ்திரேலியா நோக்கிய அகதிகளின் படகுகள் குறித்து முன்கூட்டிய அந்தந்த நாடுகளுக்கு எச்சரித்து, அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply