17 மில்லியன் வருடங்கள் பழைமையான விந்தணு கண்டுபிடிப்பு

sparmஉலகின் மிகப் பழைமையான 17 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட விந்தணு நன்கு பாதுகாப்பாக புதையுண்ட நிலையில் அவுஸ்திரேலியாவில் விஞ்ஞானிகளால் கண்டுபிபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள விந்தணு பழைமையான இனங்களில் ஒன்றான ஷ்ரிம்ப் வகை உயிரினத்தினுடையது என விஞ்ஞானிகள் நேற்று தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பிராந்தியத்திலுள்ள உலக பாரம்பரிய புதைபொருள் தளத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல பழைமையான உயிரினங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘றிவர்ஸ்லெய்ட் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த விந்தணு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கண்டுபிடிப்பிடிப்பு’ என 35 வருடங்களாக றிவர்ஸ்லெய்ட்டில் தோண்டிக்கொண்ருக்கும் நியூ சௌத் வேல்ஸின் உயிரியல், புவி மற்றும் சூழலியல் விஞ்ஞானங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக் ஆக்கர் தெரிவித்துள்ளார். ‘புவியியல் வரலாற்றில் இதுவரையில் கண்டுபிடிப்பப்பட்ட உலகின் மிகப்பழைமையான தொல்பொருள் விந்தணு இதுவாகும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட விந்தணுவைக் கொண்ட விலங்கினது உடலினை விட இந்த விந்தணு நீளமானது எனவும் அது சுருளாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply