கொழும்பு: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து வரும் 26ஆம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்களுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கண்டிப்பாக பங்கேற்பார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
















