வடமாகாண சபையின் பணிகளில் குறுக்கீடு செய்கின்றார் ஆளுநர்; லக்ஸ்மன் கிரியயல்ல எம்.பி. குற்றஞ்சாட்டுகின்றார்

Lakhsman_Kiriella_UNPவடக்கு மாகாண சபையின் நிர்வாகப் பணிகளில் ஆளுநர் தேவையின்றி தலையீடு செய்கின்றார். வடக்கு மாகாண சபை சுயாதீனமான முறையில் இயங்குவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியயல்ல.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, “”வடக்கு மாகாணசபையின் நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கக்க வேண்டும். இல்லாது விடில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். நாடு என்றால் தெளிவான ஒரு கொள்கையுடன் ஆட்சி செய்ய வேண்டும்.

நமது நாட்டில் அரசுக்கு ஸ்திரமான கொள்கை என்று ஒன்றும் கிடையாது. மக்கள் பற்றிய எந்தக் கரிசனையும் இன்றி அரசு இயங்கி வருகின்றது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. கடன் மற்றும் வட்டி என்பவற்றைச் செலுத்தவே அரசின் வருமானம் போதவில்லை. தெளிவான சிந்தனையுடன் பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டியது இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளது. வெளி நாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. எவரும் இலங்கையில் முதலீடு செய்ய விரும்பு வதில்லை.’என்று தெரிவித்துள்ளார். –

Tags: , ,

Leave a Reply