பப்புவா நியூ கினியாவில் காவலாளிகள் தாக்கியே ரேஸா பெராட்டி இறந்தார்’ – விசாரணை அறிக்கை

Papua-New-Guineaபப்புவா நியூ கினியாவின் மானுஸ் தீவில் அவுஸ்திரேலியா நடத்திச் செல்லும் தடுப்பு முகாமில் கடந்த பெப்ரவரி மாதம் நிகழ்ந்த வன்முறைகள் குறித்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.

Papua-New-Guinea பெப்ரவரி 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி நீடித்த வன்முறைகளின் விளைவாக ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் ரேஸா பெராட்டி பலியானார். முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 60 பேர் வரை காயமடைந்தார்கள்.

இருபத்து மூன்று வயதுடைய பெராட்டி மீதான தாக்குதலை வழிநடத்தியதாக இரட்சண்ய சேனையின் பணியாளர் ஒருவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவா பப்பவா நியூ கினியாவைச் சேர்;ந்தவர் ஆவார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களால் கறைபடிந்த ஜீஎஸ்-4 என்ற நிறுவனம் முகாமை நிர்வகித்து வந்தது.

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கருத்து வெளியிடுகையில், ‘திரு.பெராட்டி குறித்த பணியாளரால் பின்னால் இருந்து தாக்கப்பட்டுள்ளார்,’ என்றார்.

‘இந்த நபர் ஜீஎஸ்-4 நிறுவனத்தைச் சேர்ந்தவர் அல்லர். இரட்சண்ய சேனைக்காக வேலை செய்தவர்,’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜீஎஸ்-4 நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர் அடங்கலாக பல தனிநபர்கள் பெராட்டிக்கு அருகில் விரைந்து சென்று அவரை காலால் உதைத்து. தலையில் கல்லைப் போட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறதென அமைச்சர் குறிப்பிட்டார்.

மானுஸ் தீவில் நிகழ்ந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கைகளை கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தியிருந்தது. படகுமூலம் வருபவர்களை மானுஸ் தீவு, நவுரு தீவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்து அவர்களின் புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் கொள்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் விமர்சி;த்திருந்தன.

இத்தகைய பின்னணியில், மானுஸ் தீவு கலகம் பற்றி சட்ட அதிபர் திணைக்களத்தின் முன்னாள் செயலாளர் ரொபர்ட் கோர்னல் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply