சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்ற 13 பேர் கைது

arrest5சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 13 ​பேர் மொரட்டுவ, லுனாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட தேடுதலின்போது விடுதியில் தங்கியிருந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 26ஆம் திகதி தொடக்கம் குறித்த விடுதியில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நெடுங்கேணி, முல்லியவெளி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தம்மை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வாக்குறுதி அளித்ததாகவும், அதற்காக ஒவ்வொருவரும் தலா 10,000 ரூபா பணம் வழங்கியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply