தமது நண்பர்கள் இருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில், தாமும் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தினாலேயே இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்கான சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டின் அகதி முகாம் ஒன்றில் இருந்து கடந்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த அவர், பாதுகாப்பு வீசாவில் தங்கி இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தீக்குளித்தார்.
அவர் தாம் எந்த தருணத்திலும் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வசித்து வந்ததாக அவருடன் வசித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான அகதி கோட்பாட்டின் கடும்போக்கு நிலை காரணமாக எதிர் காலத்தில் இன்னும் உயிர்களை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார் .
அபாட் அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி யுடனான ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது .
இலங்கை அகதிகளை மட்டும் திட்டமிட்டு நாடுகடத்துவது உண்மையில் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் மிகவும் வேதனையளிக்க கூடிய விடயமாகத்தான் உள்ளது .
இவர்களின் பிரச்சனைகளுக்கு அவுஸ்த்ரேலியா வாழ் தமிழ் தலைவர்கள் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமை உள்ள்ளது குறிப்பிடத்தக்கது.
















