மனித உரிமைகளை மீறும் மஹிந்த அரசு

mahinda-rajapaksa4-600inஇலங்கை அரசு சொந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளையே மீறிவருகிறது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமாயின் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது தனி ஈழம் அமைக்கும் முனைப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தனி ஈழமொன்றை அமைப்பது குறித்து இலங்கை மற்றும் புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கை ஏற்புடையதல்ல.

ஐக்கிய இலங்கை மற்றும் நாட்டின் பெளதிக ஒருமைப்பாடு ஆகியன தொடர்பில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு. இலங்கை விவகாரங்களில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய அரசு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதனாலும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதனாலும் சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றன.

சொந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளையே இலங்கை அரசு மீறி வருகிறது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமாயின் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்க வேண்டும். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்து வருகிறார். அரசின் நடவடிக்கைகளால் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை சபையில் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச தலையீடுகளை வரையறுக்க இன்னமும் சந்தர்ப்பம் உள்ளது என்றார்.

Tags: , ,

Leave a Reply