காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சணை சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சணையுடன் செயற்படுகிறது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

“காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயற்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் ஏப்ரல், மே மாதத்துக்கான தண்ணீரை திறக்க உத்தரவிட்டது.

தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க கூடாது என தமிழக அரசின் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டோம். விவசாயிகளுக்காக இந்த வழக்கை தமிழக அரசு நடத்தி வருகிறது. மத்திய அரசின் வாதம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒருதலைப்பட்சமானது என வாதிட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!