தற்கொலை முயற்சியில் இன்னொரு தமிழர் – அகதிப் பேரவை தகவல்

fireபடகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்த மற்றொரு தமிழர் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்த 40 வயதுடைய இலங்கையர், தற்காலிக விசாவில் தங்கியிருந்த சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை அறிவித்துள்ளது.

இந்த நபர் வெள்ளிக்கிழமை இரவு மெல்பேர்ணின் கிழக்கில் அமைந்துள்ள நோபல் பார்க் பிரதேச வீடொன்றில் தமது உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முனைந்ததாகவும், குறித்த சம்பவத்தில் காயமடைந்து Dandenong மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இவருடைய காலில் மாத்திரம் சிறுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இவர் சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்து வெளியேறக்கூடும் எனவும் தமிழ் அகதிகள் பேரவை அறிவித்துள்ளது.

தாம் இரவு எட்டு மணியளவில் குறித்த வீட்டுக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து ஒரு மனிதரை Dandenong வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தின் பின்னணி தெளிவாகத் தெரியவில்லையென ஏபிசி அறிவித்துள்ளது.

குறித்த நபர் தமக்குத் தாமே தீ வைத்துக் கொள்ள முனைந்தார் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டால் இது இவ்வாண்டுக்குள் நிகழ்ந்த மூன்றாவது தற்கொலை முயற்சியாக இருக்கும்.

Tags: , , ,

Leave a Reply