இந்தப் படகு துறைமுகத்தை அடைந்த சமயத்தில், இதற்கு கடற்படையின் பாரம்பரியங்களுக்கு அமைய வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே, இது இலங்கை கடற்படையின் வரலாற்றில் மிகவும் முக்கியமான தினம் என்றார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய படகு 38 மீற்றருக்கு மேலான நீளமும், 2.3 மீற்றர் அகலமும் கொண்டது. இது 24 கடல் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும்.
கடந்தாண்டு பொதுநலவாய நாடுகளின் இராஜ்ஜியத் தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்ற சமயம், அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ரோனி அபொட் இரு படகுகளை அன்பளிப்பாக வழங்குவது உறுதியளித்திருந்தார்.
படகு மூலமாக அவுஸ்திரேலியாவை நாடும் புகலிடக் கோரிக்கையார்கள் கடல் மார்க்கமாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவற்றைத் தடுப்பதில் இலங்கையின் கடற்படை காட்டும் அக்கறையை வரவேற்கும் நோக்கத்துடன் இரு படகுகள் பரிசளிக்கப்பட்டன. முதலாவது படகு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்ததக்கது.
















