கூடுதலான அகதிகளை உள்வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரிக்கும் அரசாங்கம்

australia-flagஉலகெங்கிலும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளதாக அறிவிக்கப்படும் வேளையில், அவுஸ்திரேலியாவின் மனிதநேய அகதிப் பராமரிப்புத் திட்டம் நியாயமானதென குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

Refugee அகதிகளுக்கான ஐநா உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 51 மில்லியனைத் தாண்டுகிறது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் பதிவான ஆகக்கூடுதலான தொகையாகும்.

சிரியாவிலும், ஆபிரிக்காவின் பல பாகங்களிலும் தீவிரடைந்துள்ள நெருக்கடிகள் காரணமாக கடந்த வருடத்தை விடவும் ஆறு மில்லியன் மக்கள் அதிகப்படியாக இடம்பெயர்ந்துள்ளார்கள் என்று ஐநா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் 17 மில்லியன் மக்கள் அகதிகளாகவும், 33 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு மில்லியன் பேர் புகலிடக் கோரிக்கை சமர்ப்பித்துள்ளார்கள் என்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

இத்தகைய பின்னணியில், அவுஸ்திரேலியாவிற்குள் வருடாந்தம் 13,750 பேர் மாத்திரமே உள்வாங்கப்படுகிறார்கள் என்று தொழிற்கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார். இதனை 20,000 வரை அதிகரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகும்.

ஆனால், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடிமயர்த்தும் முயற்சியில் அவுஸ்திரேலியா தனது பங்கை சரியாக நிறைவேற்றுகிறதென குடிவரவு அமைச்சர் குறிப்பிட்டார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் கடப்பாடுகளை சரியாக பூர்த்தி செய்கிறதென அவர் கூறினார்.

Tags: ,

Leave a Reply