சமூகவலைத் தளங்களுக்கும் அரோகரா? மத- இனரீதியிலான வெறுப்புணர்வை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Gotabaya-Rajapaksa5சமூக ஊடகங்களை பயன்படுத்தி மத மற்றும் இன ரீதியிலான வெறுப்புணர்வை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அளுத்கம வன்முறைகளுக்கு பின்னர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மத ரீதியிலான வெறுப்புணர்வை தூண்டுவது அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வதந்திகளும் பொய்யான தகவல்களும் சமூக ஊடகங்கள் ஊடாக அதிகளவில் பரப்பபடுவதாகவும், முஸ்லீம் எதிர்ப்பு மற்றும் பௌத்த எதிர்ப்பு முகப்புத்தகங்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags: , ,

Leave a Reply