அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்துடன் படகில் சென்று அநாமதேயமாகும் நம்மவர்கள்

refugee3தற்போது மிகவும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ள கடல் பயணம் பற்றி எல்லோராலும் பேசப்படும் விடயம்களை அழமாக பார்ப்போம் எவ்வளவோ சொன்னாலும் எம்மவர்கள் கடல் பயணத்தை விடுவதாகவே இல்லை இறைவனால் நல்ல மனிதனாக படைக்கப் பட்டு நல்ல அறிவைக்கொடுதும் அநாதரவாக்கும் தமிழர்கள்.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் தஞ்சம் கோரு­வ­தற்­காக 153 ஈழத்­த­மி­ழர்­களை ஏற்றிச் சென்ற படகு எண்­ணெய்க்­க­சிவு கார­ண­மாக கிறிஸ்மஸ் தீவி­லி­ருந்து 250 கிலோ­மீற்றர் தொலைவில் நடுக்­க­டலில் சிக்­கி­யுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய ஒலி­ப­ரப்பு நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யாவின் புதுச்­சே­ரி­யி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு படகில் 32 பெண்கள், 37 சிறு­வர்கள் உட்­பட 153 பேர் கடந்த 13 ஆம் திகதி புறப்­பட்­டுள்­ளனர்.
இந்த சம்­பவம் தொடர்பில் ஏ.பி.சி. செய்தி நிறு­வ­னத்­திற்கு படகில் பய­ணித்த டியூக் என்­பவர் கருத்துத் தெரி­விக்­கையில்,

இந்தப் படகில் தற்­போது சிக்­கி­யுள்­ள­வர்கள் அனை­வரும் இலங்கைத் தமி­ழர்­க­ளாவர். இந்­தி­யாவில் வாழ முடி­யா­ததால் புதுச்­சே­ரி­யி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு இந்தப் படகில் புறப்­பட்டோம். ஆனால் தற்­போது எண்­ணெய்க்­க­சிவு ஏற்­பட்டு படகு கோளாறாகியுள்ளதால் நடுக்­கடலில் சிக்­கி­யுள்ளோம் என்று தெரி­வித்­துள்ளார்.

கடலில் பலத்­த­காற்­றுடன் கூடிய மழை பெய்து வரு­கின்­றது. பெரும் அலைகள் படகைத் தாக்­கு­கின்­றன. இங்கு சில மீன்­பி­டிப்­ப­ட­குகள் இருப்­பது போன்ற விளக்கு ஒளிகள் எங்­க­ளுக்குத் தெரி­கின்­றன. ஆனால் இது­வரை எங்­க­ளுக்கு எந்த உத­வியும் கிடைக்­க­வில்லை. எங்­களைக் காப்­பாற்ற யாரேனும் உதவ வேண்டும் என்றும் அந்த நபர் தெரி­வித்­துள்ளார்.

இந்த அக­திகள் படகு கிறிஸ்மஸ் தீவி­லி­ருந்து 250 கிலோ­மீற்றர் தொலைவில் தரித்து நிற்­ப­தா­கவும் பட­கி­லி­ருக்கும் இரண்டு தமிழ் அக­திகள் தம்­முடன் செய்­மதி தொலை­பேசி உத­வி­யுடன் பேசி­ய­தா­கவும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் குடி­வ­ரவு சட்­ட­வாளர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஆனால் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­களை ஏற்­றிய படகு தமது கடல் எல்­லைக்குள் வர­வில்லை என்று அவுஸ்­தி­ரே­லிய குடி­வரவு அமைச்சர் ஸ்கொட் மொரியன் தெரி­வித்­துள்ளார். ஊட­கங்­களில் வெளியான செய்­தி­களில் உண்மை இல்லை என்றும் அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­ரப்பில் அக­திகள் சிக்கித் தவிப்­ப­தாக தக­வல்கள் கிடைத்தால் அவர்­களை மீட்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முதல் வந்த அகதிகளுக்கு இதுவரைக்கும் எந்தவிதமான வழக்குகளோ விசாரணைகளோ இடம்பெற வில்லை 75 வீதமானவர்களின் வீசாக்கள் முடிவடைந்தும் இதுவரைக்கும் புதிப்பிக்கப்படவில்லை அப்படியான நிலைமையில் இங்கு இருக்கின்றவர்களும் வாழ்வாத சாவாத என்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.

தற்போது இலங்கை அகதிகள் தொடர்பில் அமைசர் எவ்வளவுக்கு உண்மையை மறைக்க முடியுமோ அவ்வளவுக்கு உண்மைகளை மறைக்கின்றார்.

அகதிகள் படகு மூலம் அவுஸ்ரேலியா வந்தாலும் இனிமேல் ஒருகாலமும் அவுஸ்ரேலியாவில் தங்கவைக்கப்ப்டமாட்டர்கள் என்பதே உண்மையானதாகும்.

கடந்த சில வரு­டங்­க­ளா­கவே அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு இலங்­கை­யி­லி­ருந்தும் இந்­தி­யா­வி­லி­ருந்தும் பட­குகள் மூலம் பெரு­ம­ள­வானோர் அக­தி­க­ளாக சென்­றுள்­ளனர். உயிரைப் பணயம் வைத்து இவர்கள் பட­கு­களில் ஏறி பய­ணங்­களை மேற்­கொண்­டுள்­ளனர். இவ்­வாறு பய­ணித்­த­வர்­களில் நூற்­றுக்­க­ணக்­கானோர் பலி­யா­கி­யு­முள்­ளனர். இவ்­வா­றான நிலையில் பட­குகள் மூலம் வரும் அக­தி­களை தடுக்கும் வகையில் அவுஸ்­தி­ரே­லியா இலங்­கை­யுடன் இணைந்து பல்­வேறு செயற்­றிட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

பட­குகள் மூலம் வரும் அக­தி­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் வகையில் இலங்கை கடற்­ப­டைக்கு கண்­கா­ணிப்பு
பட­கு­க­ளையும் அவுஸ்­தி­ரே­லியா வழங்­கி­யுள்­ளது. பட­குகள் மூலம் செல்லும் அக­தி­களை வேறு இடங்­களில் தங்க வைத்து மிகவும் மோசமான நிலைக்கு அவர்­களை படாதபாடு படுத்­தி­வ­ரு­கின்­றது.

இவ்­வா­றான இக்­கட்­டான சூழ்­நி­லை­யிலும் கூட மேலும் மேலும் அக­திகள் தமது உயிர்­களை பணயம் வைத்து படகு மூலம் செல்லும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திக­திக்­குப்­ பின்னர் அக­திகள் படகு எதுவும் அவுஸ்­தி­ரே­லி­யாவை சென்­ற­டை­ய­வில்லை. 6 மாதங்­க­ளுக்கு மேலாக அக­தி­களின் வரு­கையை தடுத்த அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­திற்கு கிறிஸ்மஸ் தீவுக்கு 250 மைல் தொலைவில் அக­திகள் பட­கு­களில் உள்­ள­வர்கள் தம்மை காப்­பாற்­று­மாறு கோரி­யுள்­ளமை பெரும் சங்­க­ட­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­க­மா­னது பட­குகள் மூலம் வரும் அக­தி­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு வித­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. இலங்­கை­யிலும், இந்­தி­யா­விலும் இந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. பக்கம் பக்­க­மாக பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரங்­களும் வானொ­லிகள், தொலைக்­காட்­சி­களில் ஒளி­வி­ளம்­ப­ரங்­க­ளும் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. பட­குகள் மூலம் வரும் அக­தி­க­ளுக்கு அகதி அஸ்­தஸ்து வழங்­கப்­ப­ட­மாட்­டாது. இவ்­வாறு பெரு­மளவு பணத்தைச் செல­வ­ழித்து பெரும் உயிர் அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தியில் அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு வந்து நடக்­கப்­போ­வது ஒன்­று­மில்லை என்று அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரிகள் அடிக்­கடி தெரி­வித்து வரு­கின்­றனர்

.தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலம் உண்மையில் அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் அன்மையில் தீக்குளித்து மரணித்தும் பெற்ற தாய் தந்தையர் தன்னுடைய மகனுக்கு இறுதி கிரிகை கூட நடத்துவதற்கு அனுமதிக்காத இந்த அரசு எப்படி இனி வரும் அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் அகவே இலங்கை தமிழர்களுக்கு ஒரு காலமும் அவுஸ்ரேலியா அரசாங்கம் உதவமாட்டாது .

இலங்­கையில் கடந்த வாரம் கூட கொழும்­பிலும், யாழ்ப்­பா­ணத்­திலும் அவுஸ்­தி­ரே­லிய தூத­ரக அதி­கா­ரிகள் கருத்­த­ரங்­கு­களை நடத்தி பட­குகள் மூலம் வரும் அக­தி­க­ளுக்­குள்ள பாதக நிலைமை குறித்து எடுத்­துக்­கூ­றி­யு­மி­ருந்­தனர். இவ்­வா­றான நிலையில் அவுஸ்­தி­ரே­லியா நோக்கி படகில் சென்­றுள்ள ஈழத் ­த­மி­ழர்கள் பெரும் ஆபத்தில் சிக்­கி­யுள்­ள­தாக தற்­போது தகவல் வெளியா­கி­யுள்­ளது.

இந்தத் தக­வ­லா­னது தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
கடந்த டிசம்பர் மாதத்­திற்­குப்­பின்னர் இலங்­கை­யி­லி­ருந்து அக­திகள் படகு எதுவும் அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு செல்­ல­வில்லை. ஆனால் இந்­தி­யா­வி­லி­ருந்து ஈழத்­த­மி­ழர்கள் பட­குகள் மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு செல்லும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் இலங்கைத் தமி­ழர்கள் ஒரு இலட்­சத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் இடம் பெயர்ந்து அகதி முகாம்­களில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

பல­வ­ரு­டங்­க­ளாக இவ்­வாறு வாழும் இவர்­க­ளுக்கும் உரிய வச­திகள் இல்­லை­யென்ற குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருக்­கின்­றது. இத்­த­கைய குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே 153 ஈழத்­த­மி­ழர்­களும் புதுச்­சே­ரி­யி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா நோக்கி படகு மூலம் பய­ணித்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
உண்­மை­யி­லேயே இவ்­வாறு தத்­த­ளிக்கும் அக­தி­களை மீட்­க­வேண்­டி­யது அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். ஆனால் இவ்­வா­றான ஒரு படகு தமது கடற்­ப­ரப்­பிற்குள் இல்லை என்று அவுஸ்­தி­ரே­லியா கூறி­யி­ருக்­கின்­றது. எனவே இதன் உண்­மைத்­தன்மை கண்­ட­றி­யப்­பட்டு தத்­த­ளிக்கும் மக்கள் காப்­பாற்­றப்­ப­ட­வேண்டும். அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு பய­ணிக்கும் ஆசையில் கடந்த சில வரு­டங்­களில் பலி­யா­ன­வர்­க­ளைப்­போன்று இந்த 153 ஈழத்­த­மி­ழர்­களும் கடலில் சங்­க­மமாவதை அனு­ம­திக்க முடி­யாது.

எனவே இந்த விட­யத்தில் உட­ன­டி ­ந­ட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்தின் பொறுப்­பே­யாகும்.
இந்­திய அகதி முகாம்­களில் தங்­கி­யுள்ள ஈழத்­த­மி­ழர்கள் மனம் வெறுத்த நிலை­யி­லேயே அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு தமது உயிர்­களை பணயம் வைத்து . பட­கு­களில் அக­தி­க­ளாகச் செல்ல முனைந்து வரு­கின்­றனர். தொடர்ந்தும் இந்­தி­யாவில் அகதி வாழ்க்கை வாழ்­வ­தற்கு அவர்கள் விரும்­ப­வில்லை. கிறிஸ்மஸ் தீவுக்கு 250 மைல்­க­ளுக்கு அப்பால் தத்­த­ளிப்­பதாக கூறப்­படும் படகில் 37 சிறு­வர்கள் உட்­பட 153 பேர் தத்­த­ளிக்கும் செய்­தி­யானது கடந்த வியா­ழக்­கி­ழ­மையே வெளியா­கி­யுள்­ளது. அதனை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை. அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்­க­ளுடன் சிலர் செய்­மதி தொலை­பேசி ஊடாக உரை­யா­டி­யதை அடுத்து தற்­போது இவ்­வா­றான சம்­பவம் வெளிவந்­துள்­ளது.

எவ்வறாயினும் இன்று இந்தியா கடலோர பாதுகாப்பு அதிகாரி அறிவித்துள்ளார் இந்தியாவில் இருந்து எந்தவிதமான படகுகளும் புறப்பட வில்லை என்று தமிழர்கள் தரகர்களின் பொய்யான வார்த்தைகளை கேட்டு ஏமாற வேண்டாம்

இலங்­கை­யி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு செல்­வோரின் எண்­ணிக்கை குறைந்­துள்ள நிலையில் இந்­தி­யா­வி­லி­ருந்து இந்த ஈழத்­த­மி­ழர்கள் அவுஸ்­தி­ரே­லியா நோக்கி சென்­றுள்­ளனர். இதி­லி­ருந்து இந்­தி­யாவில் வாழும் ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு இன்­னமும் அவர்­க­ளது விருப்­பத்­திற்­கேற்ப உரிய வச­திகள் செய்­யப்­ப­ட­வில்லை என்­பது புல­னா­கின்­றது. இலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் ஆகி­விட்­டன. நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைக்கண்டு இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் அங்கிருந்து உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகளை கட்டுப்படுத்த முடியும்.

இலங்­கை­யி­லி­ருந்தும் அவுஸ்­தி­ரே­லியா உட்­பட வெளி­நாடு களுக்கு ஈழத்­த­மி­ழர்கள் செல்ல முயல்­வ­தற்கும் நாட்டில் உள்ள அசா­தா­ரண நிலையும் ஒரு கார­ண­மா­கவே அமைந்­துள்­ளது. எனவே நடுக்­க­டலில் தத்­த­ளிக்கும் ஈழத்­த­மி­ழர்கள் காப்­பாற்­றப்­ப­டு­வ­துடன் எதிர்­கா­லத்தில் இவ்­வாறு உயிரைப் பணயம் வைத்து தமி­ழர்கள் செல்­லாத வகையில் உரிய நட­வ­டிக்­கை­களை இலங்கை, இந்­திய அர­சாங்­கங்கள் எடுக்­க­வேண்டும். தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு இலங்­கையில் உரிய தீர்வு காணப்­ப­டு­மானால் இத்­த­கைய பய­ணங்­க­ளையும் தடுக்கும் சூழல் உரு­வாகும். இந்த நிலைமை விரைவில் சாத்தியப்படவேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

இவற்றுக்கு அப்பாலும் தமிழர்கள் கடல் பயணம் செய்வார்களானால் இதுவே அவர்களின் இறுதிப்பயணமாக அமையும்.

-சசி

Tags: , ,

Leave a Reply