அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்;படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் இந்த கடும்போக்கான புகலிடக் கொள்கை மிகவும் பராதூரமான மனித உரிமை மீறல் என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன .
சனிக்கிழமை படகில் இருந்து இறுதியாக அழைப்புகள் வந்தவுடன் பின்பு எந்தவிதமான தொடர்புகளும் இல்லாமல் போய் உள்ளது .
இவர்களுக்கு கடலில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் இதுவரைக்கும் தெரிய வந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளது ஆகையால் அரசாங்கம் திட்டம்மிட்டு கடல் மார்க்கமாக இவர்களை நாடு கடத்தி இருக்கலாம் என பலதரப்பு வட்டரங்களிலும் இருந்து பல வகையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளி;க்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன் அவர்களும் தெரிவித்துள்ளார்.
படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எது எவ்வறாயினும் என்னும் இரு தினங்களில் அவர்களின் நிலை என்ன என்பது இலங்கை அரசாங்கம் அறிவிக்கும் என நம்பப்படுகின்றது.
















