கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையிலான கடற் பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கின்றமை மனிதாபிமானமற்ற செயல் என கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை மீளவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை இரக்கமற்ற செயலாகும் என தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளினால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளிடமே ஒப்படைத்தமைக்கு நிகரான காரியத்தை அரசாங்கம் செய்ய முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டின் மனித உரிமை குறித்த நற்பெயருந்து இந்த நடவடிக்கை களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தெரிவித்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் பிரகடனத்தை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இன்று இலங்க்கையை சென்றடைதிருப்பார்கள் அவுஸ்ரேலியா செய்திகள் ஊர்ஜீதம் செய்துள்ளன.
அந்த வகையில் இவர்கள் அனைவரும் கடல் மார்க்கமாகவே நாடுகடத்த்ப்பட்டுள்ளர்கள்
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் இந்த கடும்போக்கான புகலிடக் கொள்கை மிகவும் பராதூரமான மனித உரிமை மீறல் என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
















