புகலிடக் கோரிக்கையாளரது படகுகள் குறித்த அவுஸ்திரேலியா மெளனம் – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

Amnesty_Internationalஆஸ்திரேலியக் கடற்பரப்பில் இடைமறிக்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் இரு படகுகள் குறித்து ஆஸ்திரேலியா கடும் மெளனத்தைக் கடைப்பிடிப்பதையும் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுவதையும் சர்வதேச மன்னிப்புச்சபை கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லைப்பாதுகாப்புக் குறித்து கடைப்பிடிக்கப்படும் இரகசியத்தன்மை மூலம் இதற்கு முடிவுகாண முடியாது எனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் அகதிகளுக்கான பேச்சாளர் கிரேமி மக்கிரகொர், குடிவரவுத் துறை அமைச்சர் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்புகிறார்.

ஆனால், இந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆஸ்திரேலிய மக்களுக்குள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கையிடம் மீள ஒப்படைப்பது கொள்கைக்கு முரணானது. அந்த மக்கள் யாரால் துன்புறுத்தப்பட்டார்களோ, அவர்களிடத்தில் சித்திரவதை யையும் மரணத்தையும் எதிர்கொள்ள நேரிடலாம். கடலில் வைத்து விடியோவை பயன்படுத்தி அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியா கியுள்ளன.

இது கண்மூடித்தனமான செயல், தங்களுடைய புகலிடக் கோரிக் கையைத் தெளிவாகவும், நேர்மையாக வும் முன்வைப்பதற்கான அவர்களது உரிமையை மீறும் நடவடிக்கை. ஆஸ்திரேலிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை விசாரிப்பதற்கு பயன்படுத்தும் முறைகளை மன்னிப்புச்சபை கண்காணித்து வருகின்றது, தமிழ் மற்றும் வியட்நாமிய புகலிடக் கோரிக்கையாளர்களை விசாரிப்பதற்கு இந்த முறையைப் பயன்படுத்துவதால் உரிய நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்த விசாரணை நடை முறை பல தவறுகளைக் கொண்டது என்பதுடன் பாரபட்சமானது. ஆண்கள், பெண்கள், குழந்தைகளை விட அரசு தனது அரசியலிற்கே முக்கியத் துவம் கொடுப்பதை இது புலப்படுத்துகிறது. குறிப்பிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்குமாறு ஆஸ்திரே லிய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செயற்படாத பட்சத்தில் அது சர்வதேச கடப்பாடுகளை மீறும் செயல் என கிரேமி மக்கிரகொர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply