தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றிருக்காவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டிருக்காது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் அழித்த காரணத்தினால்தான் சர்வதேச விசாரணை நடத்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உடும்தும்பர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறுத்தப்பட்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும் கடலுக்கு அப்பால் எஞ்சியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளே சர்வதேச விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான சகலவிதமான விசாரணைகளும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காரணத்தினால்தான் என அமைச்சர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
















