மிகவும் பர பரப்பாக பேசப்படும் 153 பேர் கொண்ட படகு பற்றிய தகவல்கள் அவுஸ்ரேலியா அரசாங்கத்தால் அறிவிக்க படாத காரணத்தால் இன்று அந்த படகில் பயணித்ததாக சொல்லப் படும் ஒரு 3 வயது சிறுமியின் படத்தினை பிரதமர் டோனி அபட் க்கும் குடிவரவு அமைச்சர் மொரிசன் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுள்ளது.
இது தொடர்பாக அவுஸ்ரேலியா அரசாங்கம் உண்மையான நிலைமையை மறைத்து வருகின்றது என அகதிகளுக்கான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
3 வயதான சிறுமி எங்கே இருக்கின்றாள் என்று திரு மொரிசனிடம் கேட்ட போது அவர் அது பற்றி எதுவும் கூர மறுத்து விட்டதாக அகதி அமைப்பு தெரிவித்துள்ளது .
இது பற்றி உண்மையான நிலைமையை அறிய குடிவரவு அமைச்சின் தொலை பேசி எண் 0295230339 ,0262777860 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு 3வயது சிறுமியும் மற்றைய 151 பேரும் எங்கு உள்ளார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்று மொரிசன் அவர்களை கேட்குமாறு அகதிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
















