அமெரிக்க NSA உளவு நிறுவனம் இலங்கையை உளவு பார்க்க ஆரம்பித்துள்ளது !

national securtyஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலைய(NSA) இலங்கையை உளவு பார்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சி.ஐ.ஏ, பென்ரகன், எப்.பி.ஐ போன்ற உளவு நிறுவனங்கள் உள்ளது. இதில் NSA யும் ஒன்று. ஆனால் இது மிகவும் பலமான அமைப்பு. இந்த அமைப்பு தான் இலங்கையை தற்போது உளவு பார்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாடுகளை இன் நிறுவனம் உளவு பார்கிறது என்கின்ற வரை படம் ஒன்று, இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் இலங்கையும் குறிக்கப்பட்டுள்ளது. ண்ஸா உளவு நிறுவனமானது ஒரு நாட்டை உளவு பார்க்க அமெரிக்க அரசின் அனுமதியைப் பெறவேண்டும். இந்த வகையில் அவர்கள் அனுமதியைப் பெற்ற பின்னர் தான் உளவு நடவடிக்கையில் இறங்கமுடியும். அமெரிக்கா பல நாடுகளை உளவு பார்த்து வருகிறது. ஆனால் அது சமீபத்தில் மேலும் சில நாடுகளை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இந்த அமைப்பு உளவு பார்க்க ஆரம்பித்தால் பெரும் அன் நாட்டிற்க்கு பெரும் திண்டாட்டம் தான் வரும். காரணம் என்னவென்ரால் ஸ்டேட் -ஒப்- தி ஆட் என்று சொல்லுவார்கள், அதாவது மிக மிக அதிக தொழில் நுட்ப்பத்தைக் கொண்ட கருவிகளை பாவித்தே அவர்கள் உளவு பார்ப்பது வழக்கம். அவர்கள் பாவிக்கும் கருவிகள் பற்றி குறித்த நாடுகளுக்கு அது தொடர்பாக எதுவும் தெரிந்தே இருக்காதாம் என்கிறார்கள். பின்னர் உளவு பார்ப்பதை எப்படி தான் கண்டு பிடிக்க முடியும் ? இச் செய்தியானது நிச்சயம் ராஜபக்ஷர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாக தான் இருக்கும்.

Tags: , ,

Leave a Reply