இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேர் அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்- அரச சட்டத்தரணிகள் உறுதி

ship-ausகுழந்தைகள் உள்ளடங்களாக 153 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய, சுங்க பிரிவினருக்கு சொந்தமான படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலிய அரச சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

153 புகலிடக் கோரிக்கையாளர்களையும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக 72 மணித்தியால அறிவித்தல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்ததாக அவுஸ்திரேலிவின் ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சட்டத்தரணிகள் ஆட்சேபித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ள மனு விசாரணை செய்யப்பட்டு அவர்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் இலங்கை அதிகாரிகளிடம் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒப்படைக்கப்படமாட்டார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply