153 பேரின் நிலை என்ன ? மேலும் ஒரு பாரிய ஆர்ப்பாட்டம்

ian -rintoulஇது வரைக்கும் தெளிவில்லாமல் தொடரும் 153 பேரின் நிலை தொடர்பாக மேலும் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை அகதிகளுக்காக செயற் படும் அமைப்பான [Refugee Action Coalition Sydney ] ஏற்ப்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ian rintoul…

நடுக்கடலில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரின் கதி பற்றி அறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

aus boad கடந்த மாதம் இந்தியாவில் இருந்து பயணத்தைத் தொடங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் சுங்கப் படகில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஊர்ஜிதம் செய்திருந்தது.

இவர்கள் பற்றிய விபரங்களைத் தருமாறு கோரி, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலய அலுவலகம் இவ்வார முற்பகுதியில் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்தது.

சர்வதேச சட்டத்தின் கீழான கடப்பாடுகளின் பின்னணியில், அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பது பற்றி நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கு பதிலளித்த அவஸ்திரேலிய அரசாங்கம், இது தொடர்பான சகல விடயங்களும் நீதிமன்றத்தில் உள்ளதால் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நடக்கிறது தெரியாது என்று பிரதம மந்திரி ரோனி அபொட். தெரிவித்துள்ள நிலையில் உண்மையான நிலைமையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் இந்த ஆர்பாட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

அதே நேரம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெருமளவான தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நினைக்கின்றேன் இது உண்மையில் தமிழர்களின் பிரச்னை அகவே தமிழர்கள் அனைவரு ஒன்று சேர்ந்து இந்த அரசாங்கத்தின் கடும் போக்கு கொள்கையை தகர்க்க முன் வர வேண்டும் என்றார் .

இந்தஆர்பாட்டம் எதிர் வரும் 19ம் திகதி சரியாக 1 மணிக்கு Town Hall,Sydney யில் இடம் பெரும் எனத் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply