அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் செய்யும் முயற்சியில் உலகெங்கும் ஆய்வுகள் நடத்திவருகிறார்.
இவர் பிரான்ஸ் சென்றபோது, அங்கு உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டு கடந்த ஆண்டு அந்த பாலத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை. இதனால் பிரான்ஸில் வாழ முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















