பாலியல் தொழில் செய்த 25 பெண்களை சரமாரியாக சுட்டுக்கொலை செய்த ஈராக் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்.

baghdad-prostitutesஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 25 பெண்கள் பாலியல் தொழில் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே Zayouna district என்ற இடத்தில் உள்ள அபார்ட்மெண்டில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர். கடந்த சனிக்கிழமை பெண்கள் அனைவரும் தங்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென அந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்திற்குள் புகுந்த ISIS தீவிரவாதிகள் சரமாரியாக பெண்களை சுட்டுக்கொன்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாலியல் தொழிலாளி பெண்களை ஒரு பாத்ரூமில் வைத்து அடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாக்தாத் போலீஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த 25 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணங்களை அடைத்து வைத்திருந்த பாத்ரூம் முழுவதும் ரத்தம் சிதறிக்கிடந்தது. இந்த காட்சியை பார்ப்பதற்கே படுபயங்கரமாக இருந்ததாக ஈராக் போலீஸார் தெரிவித்தனர்.

Tags: , ,

Leave a Reply