வடக்கு கிழக்கில் சிங்கள மொழிப்பயிற்சி

sinhala_moliவடக்கு கிழக்கைச் சேர்ந்த அரச பணியாளர்களக்கு சிங்கள மொழிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சிங்கள மொழியை எழுதுவதற்கும் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கும் சிங்கள மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களத்தினால் இந்த பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச பணியாளர்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பயிற்சி நிலையத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் சிங்கள மொழிப் பயன்பாடு தடை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள மொழி பேசிய அரச பணியாளர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தண்டித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழ் பணியாளர்களுக்கு சிங்கள மொழி அறிவு சூன்யமாகக் காணப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Tags: , , , ,

Leave a Reply