இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் சிக்கல்: அவுஸ்திரேலியா

refugee3இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

153 இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களும் சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே குறித்த அகதிக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம் வழங்குவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக படகுப் பயணிகள் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிக் கோரிக்கையாளர்களை மீட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

சர்வதே கடற்பரப்பில் மீட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய சட்டத்தேவை கிடையாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அகதிக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் வழங்குவது தொடர்பிலான மனு மெல்பேர்ன் உயர் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மனு தொடர்பில் விளக்கமளிக்க அரசாங்கத் தரப்பு சட்டத்தரணிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply