157 புகலிடக்கோரிக்கை யாளர்களும் கடலில் இருந்து கரைக்கு மாற்றம்

australia-flag-boy2கடந்த சில நாட்களாக 157 புகலிடக் கோரிக்கையலர்களை வைத்திருந்த சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கஸ் தீவை நோக்கி செல்வதாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன

அங்கு இருக்கும் குடிவரவு திணைக்களமும் இவர்களை அவுஸ்ரேலியா எல்லை க்கு உட்ப்பட்ட தடுப்பு மூகாம் ஒன்றுக்குள் பாரம் எடுக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது .

இங்கு தெரிவித்த அவுஸ்ரேலியா உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில் இவர்கள் அனைவரயும் கேரட்டின் முகாமுக்கு மாற்றப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்

இது வரை கப்பல் இருந்த இடமும் அதில் உள்ள அகதிகளின் நிலைமைகளும் இரகசியமாகப் பேனப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது

இவர்களுக்காக தொடர்ந்த வழக்குகளின் வெற்றியே இன்று இந்த மக்களுக்கு முகாமுக்குள் செல்வதற்க்கான முக்கிய காரணம்மாகும்

இந்த கப்பலானது எதிவரும் சனிக்கிழமை கரையை அடையலாம் என நம்பப்படுகின்றது.

Tags: ,

Leave a Reply